சென்னை:  தமிழ்நாட்டில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறாதது சட்ட விரோதம் என்றும், உடனே யுஜிசி பிரதிநிதியை சேர்த்து அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார்.

துணைவேந்தர்கள் பதவி காலியாக உள்ள பார​தி​யார், பார​தி​தாசன், பெரி​யார் பல்​கலைக்​கழகங்​களுக்கு புதிய துணைவேந்​தரை தேர்வு செய்ய அமைக்​கப்​பட்ட தேடு​தல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதில், யுஜிஜி பிரதிநிதி இடம்பெறவில்லை. இதனால்,  யுஜிசி பிர​தி​நி​தியை சேர்த்து அரசாணை வெளி​யிடு​மாறு பல்கழகங்களின் வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இதுதொடர்​பாக ஆளுநர் மாளிகை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், யுஜிசி விதி​முறை​கள்​-2018-ன்படி பல்​கலைக்​கழக துணைவேந்​தரை தேர்வு செய்ய அமைக்​கப்​படும் தேடு​தல் குழு​வில் யுஜிசி​யின் பிர​தி​நி​தி​யும் இடம்​பெற வேண்​டும். தமிழகத்​தில் மாநில பல்​கலைக்​கழகங்​களின் சட்​டத்​தின்​படி, தேடு​தல் குழு பரிந்​துரை செய்​யும் 3 நபர்​களில் ஒரு​வர் பல்​கலைக்​கழக வேந்​தரான ஆளுந​ரால் துணைவேந்​த​ராக நியமிக்​கப்​படு​கிறார்.

இந்​நிலை​யில், பல்​கலைக்​கழகத்தின் துணைவேந்​தர்​களை தேர்​வு செய்ய வேந்​தருக்கு பதிலாக அரசுக்கு அதி​காரம் வழங்​கும் வகையில் பல்​கலைக்​கழக சட்​டங்​களில் திருத்​தங்களை தமிழக அரசு கொண்​டு​ வந்​தது. இதற்கு சென்னை உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத்தடை விதித்​தது. மேலும் இந்த விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தி​லும் வழக்கு நிலு​வை​யில் இருந்து வரு​கிறது.

அவ​காசம் நீட்​டிப்பு: இத்​தகைய சூழலில் கோவை பார​தி​யார் பல்​கலைக்​கழகம், திருச்சி பார​தி​தாசன் பல்​கலைக்கழகம், சேலம் பெரி​யார் பல்​கலைக்​கழகம் ஆகிய​வற்​றுக்கு புதிய துணைவேந்​தர்​களை தேர்​வுசெய்ய தேடு​தல் குழுக்​கள் அமைத்​திருப்​பதும், அக்​குழுக்​களுக்​கான காலஅவ​காசத்தை நீட்​டித்​திருப்​பதும் கவலை அளிக்கக்​கூடிய விஷ​யம் ஆகும்.

நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருந்​து​வரும் நிலை​யில் துணைவேந்​தர் தேடு​தல் குழு​வுக்​கான கால அவ​காசத்தை மார்ச் 21 வரை நீட்​டித்து கடந்த டிசம்​பர் 22-ம் தேதி தமிழக அரசால் அரசாணை​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

வழக்​கு​கள் நிலுவையில் இருக்​கும் நிலை​யிலும், இடைக்கால தடை பிறப்​பிக்​கப்​பட்​டுள்ள நிலை​யிலும் அரசு எடுத்த நிர்​வாக நடவடிக்​கைகள் சட்​டத்​துக்கு புறம்​பானவையாகும். மேலும் அவை நீதி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ரானவையாகும்.

இந்த விவகாரத்​தில் தொடர்ந்து நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டால் அவை சட்​டப்​படி செல்​லாது. அதோடு அரசு மற்​றும் பல்​கலைக்​கழக நிர்​வாகத்​தில் பல்​வேறு சிக்​கல்​களை​யும் ஏற்​படுத்​தும். எனவே, உச்ச நீதி​மன்ற தீர்ப்பு வரும் வரை, புதிய துணைவேந்​தர் தேர்வு பணி​களை தொடர்ந்து மேற்​கொள்​ளும் வகை​யில் தேடு​தல் குழுக்​களில் யுஜிசி உறுப்​பினரையும் சேர்த்து உடனடி​யாக அரசாணைகளை வெளி​யிடு​மாறு தமிழக அரசுக்கு வேந்​தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

முன்னதாக இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்திற்கான தேர்வுக் குழு விஷயத்தில், மாநிலச் சட்டங்கள் யுஜிசி விதிமுறைகள் மீறுகின்றன என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும்,  பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) 2018 விதிமுறைகளின்படி கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று   கூறி உள்ளது.

இந்த விதிமுறைகளுக்கு முரணாகத் தேர்வுக் குழுவை அமைக்கும் எந்தவொரு மாநிலச் சட்டமும் அந்த நியமனத்தைச் செல்லாததாக்கிவிடும்.

இத்தகைய குழுக்களின் அமைப்பு, நாடாளுமன்றத்தின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்ட உயர்கல்விக்கான தேசியத் தரங்களின் ஒரு பகுதியாகும் (யூனியன் பட்டியல், பிரிவு 66) என்பதை வலியுறுத்திய நீதிமன்றம், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகச் சட்டம், 2019-இன் பிரிவு 14(5)-ஐ ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவை உறுதி செய்தது.

யுஜிசி விதிமுறைகளுக்கு முரணான ஒரு குழு அமைப்பை வகுத்ததால், அந்தச் சட்டப் பிரிவு அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என அறிவிக்கப்பட்டது.  சட்டப் பிரிவு செல்லாது என்றாலும், தற்போதைய துணைவேந்தர் டாக்டர் எஸ். மோகனின் தகுதிகள் மற்றும் நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படாததால், அவர் தனது பதவிக்காலம் முடியும் வரை அல்லது சட்டப்பூர்வமான நியமனம் செய்யப்படும் வரை பதவியில் தொடரலாம் என்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]