டெல்லி: 3முறை ஒத்தி வைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை யாவது ஒத்திவைக்காமல் குறிப்பிட்டபடி நடைபெறுமா? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

சமீப நாட்களாக, காவிரி நீர்பிடிப்பு பகுதியில் வெளுத்துவாங்கி வரும் கனமழை காரணமா, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரியில் வெள்ளமென பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையும் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (22ந்தேதி)  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு பதிவு செய்து வந்த நிலையில் 3 முறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில், வரும் புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.