சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள தர்மதுரை திரைப்படம்,  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்காக திரையிடப்பட்டது.  படத்தைப் பார்த்த ராமதாஸ் கண்கலங்கி, “மிக சிறப்பான படம். இதை அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.
d
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்மதுரை. இந்த படம் நாளை மறுநாள் (19ம் தேதி) வெளியாகிறது.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தர்மதுரை படப் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, சி.பி.எம். கட்சியின் தமிழ்மாநில தலைவர் ஜி.ராமகிருஷணன், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் படத்தின் தனிக் காட்சியை பார்த்தனர்.

ஜி.கே.மணி, ஜி.ஆர்., வைரமுத்து...
ஜி.கே.மணி, ஜி.ஆர்., வைரமுத்து…

“மிகச் சிறப்பான படம். மக்களுக்கு நல்ல செய்தியை சொல்லியிருக்கிறீர்கள்” என்று இயக்குநர் சீனு ராமசாமியை பாராட்டிய ஜி.ராமகிருஷ்ணன், விஜய் சேதுபதியையும் மனமார பாராட்டினார். “சிவாஜி நடிக்க வேண்டிய கதாபாத்திரம். அதை அழகாக செய்திருக்கிறீர்கள்” என்று புகழ்ந்திருக்கிறார் ஜி.ஆர்.
ஜி.கே. மணியும், படத்தை பாராட்டியிருக்கிறார். அதோடு, படத்தைப்பற்றி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸிடம் சொல்லியிருக்கிறார்.  அவரும் தர்மதுரையைப் பார்க்க விருப்பப்பட.. அடையாறு என்.எப்.டி.சியில் சிறப்புக் காட்சி ஏற்பாடு ஆனது.
ராமதாஸ், அன்புமமணி, காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் குடும்பத்துடன் வந்திருந்து படத்தைப் பார்த்தனர்.
IMG-20160817-WA0003
ராமதாஸ், “அரசு மருத்துவர்களைப் பற்றி அருமையாக படம் எடுத்திருக்கிறீர்கள். பல இடங்களில் நானே கண் கலங்கிவிட்டேன்” என்று  இயக்குநர் சீனு ராமசாமியை பாராட்டினார். மேலும்,” இந்த படத்தை அனைவரும் குடும்பத்தோடு பார்க்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
அப்போது விஜய்சேதுபதியை ராமதாஸிடம் அறிமுகப்படுத்திய அன்புமணி, “விஜய் சேதுபதி எந்தவித பின்புலமும் இல்லாமல் தன் சொந்த முயற்சியில் முன்னணிக்கு வந்திருக்கிறார்” என்றார்.
விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாக  பாராட்டிய ராமதாஸ், “இந்தத் திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டும்” என்றார்.
இதனால் தர்மதுரை படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.