சென்னை:

ன்றி மறந்தவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வைகோ என்று கூறிய முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எட்டப்பனாக நடிக்க உகந்தவர் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து தெளிவில்லாமல் சிலர் பாராளுமன்றத்தில் பேசிக்கொண்டி ருக்கிறார் என்று வைகோவை மறைமுகமாக தாக்கிய இளங்கோவன் காங்கிரஸ் தயவால் பதவிக்கு வந்தவர்கள் இன்று காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசிவிட்டு அழகிரியிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டு பிறகு சொல்கிறார்கள் நான் கொஞ்சம்தான் பேசினேன் என்று கூறுகிறார்கள்  என்று கடுமையாக சாடினார்.

சிங்கம்1, சிங்கம் 2, பாகுபலி -1, பாகுபலி -2 என்று படங்கள் வெளியாகி வருவதுபோல, வீரபாண்டிய கட்டபொம்மன்-2 படம் வெளியானால் அதில் எட்டப்பனாக நடிப்பதற்கு உகந்த நபர் யார் என்று சொன்னால், மறைந்த வி.கே.ராமசாமியை விட சிறப்பாக நடிக்கக்கூடியவர் வைகோ என்றவர், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் எட்டப்பன் கதாப்பாத்திரத்திற்கு அவர் பொறுத்தமானர்… அவரது உண்மையான தோற்றமே அதுதான் என்றார்.

டில்லி செல்லுங்கள் மோடியை பாருங்கள், அமித்ஷாவை பாருங்கள் நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை என்ற இளங்கோவன், ஆனால் அவர்கள் சொல்கிறபடி ஆடுகிறீர்களே  இது என்ன நியாயயம்… ஜெயித்து ஒரு வாரம் கூட ஆகவில்லை.. ஆனால் தற்போது தான் காங்கிரஸ் தயவில் ஜெயிக்கவில்லை என்று சொல்கிறார்… இதை யார் நம்புவார்கள் என்று…

ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்  என்று பிரச்சாரம் செய்த வைகோ, எம்.பியாக பதவி பெற்றதும் ஒரு வாரத்தல்  தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டார் என்றும் கடுமையாக விமர்சித்தாவர், அழகிரி கூறியபடி வைகோ ஒரு பஞ்சோந்திதான் என்றும், நன்றி மறந்தவர் என்பதற்கு தமிழகத்தில் சிறந்த உதாரணம் வைகோதான் என்றவர், காங்கிரசை நையாண்டி செய்து சீண்டி பார்க்க முயன்றால், அதை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.