சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம் தெரிவித்து சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில்,  ஆளுநரின் மரபுமீறிய பேச்சு, அதுகுறித்து மரபு மீறிய தீர்மானம், ஆளுநரின் வெளிநடப்பு என பல மரபு மீறிய செயல்கள் அரங்கேறின.  இதையடுத்து,  ஆளுநரின் சட்டப்பேரவை உரைக்கு வருத்தமும், நன்றியும் பதிவு செய்ய கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் எழுதினார். அதில், . சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் உரையாற்றியதற்கு பேரவை வருத்தத்தை பதிவு செய்கிறது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடத்து,  ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என சட்டபேரவையில் திமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் தீர்மானம் தாக்கல் செய்தார்.  தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெற்ற உரையின் சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் உரையாற்றியமைக்கு பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது என்று தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.