சென்னை: இன்று 70வது பிறந்த நாள் கொண்டாடும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

70 ஆவது பிறந்தநாளையொட்டி முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதற்கிடையில்  முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு அவரது குடும்பத்தினர் குடியரசுதலைவர், துணைகுடியரசு தலைவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, கேரள முதலமைச்சர், மாநில கவர்னர்கள்,  உள்பட  திமுக தலைவர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், திமுகவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த  நிலையில், அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவரது சார்பில் தனித்தனியாக  நன்றி தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், ஆங்கிலத்தில் வாழ்த்து சொன்னவர்களுக்கு Thank you for your kind wishes என்றும், தமிழில் வாழ்த்து சொன்னவர்களுக்கு வாழ்த்துக்கு நன்றி என்றும்  குறிப்பிட்டுள்ளார்.