சென்னை

நான் பாஜகவை விட்டு விலகப் போவதில்லை என தமிழிசை சௌந்தரராஜன் கூறி உள்ளார்.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் பதவி வகிப்பவர் தமிழிசை சௌந்தர்ரஜன்.    மற்ற தமிழக பாஜக தலைவர்களுடன் இவருக்கு அதிருப்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.    அதற்கேற்றார் போல் ஆர்கே நகர் இடைத்தேர்தலை பணபட்டுவாடா புகாரை முன்னிட்டு ரத்து செய்ய வேண்டும் என கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தமிழிசை கூறியதற்கு எதிர் மாறாக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார்.

அத்துடன் தற்போதைய பேருந்துக் கட்டன உயர்வை கண்டித்து பாஜக போராட்டம் நடத்தும் என தமிழிசை தெரிவித்திருந்தார்.   அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இந்தக் கட்டண உயர்வு நியாயமானதே என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.  இது தவிர மற்ற தலைவர்களான எச் ராஜா மற்றும் எஸ் வி சேகருடனும் இவருக்கு மனக்கசப்பு உள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.

அத்துடன் எச் ராஜா மற்றும் எஸ் வி சேகர் ஆகியோர் மீது கட்சி மேலிடத்துக்கு தமிழிசை புகார் அளித்துள்ளதாகவும. அதற்கு கட்சி மேலிடம் செவி சாய்க்காததால் தமிழிசை கட்சியில் இருந்து விலகப் போவதாகவும் இணைய தளங்களில் செய்திகள் வெளியானது.    இதனால் இணைய தளத்தில் பலரும் பரபரப்பு அடைந்தனர்.

இது குறித்து தமிழிசை செய்தியாளர்களிடம், ”நான் கட்சியை விட்டு விலகப் போவதாக வந்த தகவல் விஷமத்தனமானது.   சிறிதளவும் உண்மை இல்லை.  நான் என்றும் பாஜக வை விட்டு விலக மாட்டேன்.  அத்துடன் நான் எச் ராஜா மற்றும் எஸ் வி சேகர் மீது எந்தப் புகாரும் அளிகவில்லை.   பாஜக பலமடைந்து வருவதால் சிலர் அதை தடுக்க இவ்வாறு தகவல்கள் பரப்புகின்றனர்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.