
தெலுங்கில் வெளியாகி ஹிட்டான நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக் தள்ளிப் போகாதே படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். அதர்வா நாயகனாக நடிக்கிறார் .அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். முக்கிய ரோலில் அமிதாஷ் பிரதான் நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், ஜெகன், காலி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.
அஜர்பைஜான் நாட்டில் ஜிசி என்ற சிகரத்தின் மீது 70 அடி உயரத்திற்கு மலையேற்றம் செய்து இந்த படத்தின் சில காட்சிகளை படமாக்கினார்களாம்.
மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த படத்திற்கு எடிட்டர் ஆர்கே செல்வா எடிட்டிங் செய்கிறார்.
பலமுறை வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்பட்டு தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
தற்போது அக்டோபர் 14-ம் தேதி ஆயுதப் பூஜை விடுமுறைகளைக் கணக்கில் கொண்டு வெளியாகவுள்ளது ‘தள்ளிப் போகாதே’. இதனைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
The feel of love cannot be postponed further #ThalliPogathey Releasing Worldwide on October 14
Produced & Directed by @Dir_kannanR #ThalliPogatheyFromOct14@Atharvaamurali @anupamahere @amitashpradhan @masalapix @mkrpproductions @mangomusicTamil @DoneChannel1 @digitallynow pic.twitter.com/h3IgqPD0tW
— MKRP PRODUCTIONS (@mkrpproductions) September 19, 2021