விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் தளபதி67.

இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது இதில் விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், அனிருத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டி.வி. நிறுவனம் வாங்கி இருப்பதாக 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தளபதி67 படத்தின் போஸ்டர், பர்ஸ்ட் லுக், ஸ்டோரி லைன், ஸ்னீக் பீக், பர்ஸ்ட் சிங்கிள் என்று எதுவுமே இன்னும் வெளியாகாத நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமை விற்றிருப்பது குறித்த செய்தி விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டார்ட் கேமரா ஆக்சன் கூட சொல்லாமல் கல்லா கட்டியிருக்கும் தளபதி 67 படத்தின் தொலைக்காட்சி உரிமை என்ன விலைக்கு விற்கப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை என்ற போதும் இந்தப் படம் முந்திய படங்களை விட வசூலில் சாதனை படைக்கும் என்று விஜய் ரசிகர்கள் இப்போதே கங்கணம் கட்டியுள்ளனர்.