‘தலைவர் 169 ‘ ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகல்….!

Must read

‘அண்ணாத்த’ படத்தின் பணிகளை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து 169-வது படத்தில் கவனம் செலுத்த விருக்கிறார் ரஜினி.

இந்தப் படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தை முதலில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டது.

தற்போது ரஜினி தனது 169-வது படத்தின் தயாரிப்பு பொறுப்பிற்கு லைகா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

 

More articles

Latest article