கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் சுந்தர்.சி.

இந்நிலையில், தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் தயாரிப்பாளர் தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இப்படத்திலும் சுந்தர்.சி தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை வி.இசட்.துரை இயக்க உள்ளார்.