நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….!

Must read

விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

இந்நிலையில் ஈகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் லிஃப்ட் படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை வினீத் இயக்குகிறார். இதில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

இந்தப் படத்தை கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதால், இப்படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் போனது.

இந்நிலையில், லிஃப்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

 

More articles

Latest article