சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

அதைத் தொடர்ந்து தற்போது அவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள படங்களை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வலிமை அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித் தங்கப்பதக்கம் வென்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.