விருதுநகர்: தை அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு களுடன் 5 நாள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தை அமாவாசை ஜனவரி 28ந்தேதி அன்று வருகிறது. ஜனவரி 28ம் தேதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் தேதி இரவு 07.21 வரை அமாவாசை திதி உள்ளது.
2025ம் வருடத்தில் உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை இது என்பதால் இது மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. வருடத்தில் வரும் மற்ற 23 அமாவாசைகளில் விரதம் இருந்து, முன்னோர்களை வழிபட முடியாவிட்டாலும் இந்த ஒரு அமாவாசை அன்று மட்டும் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் வருடம் முழுவதும் அமாவாசை விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்ட பலன் கிடைக்கும். அதோடு நாம் செய்த பாவங்கள் மட்டுமின்றி, நம்முடைய ஏழு தலைமுறை முன்னோர்கள் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இதையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் 4 நாட்கள் அனுமதி வழங்கி உள்ளது.
சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலானது அமாவாசை, பிரதேசம் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் மட்டும் பக்தர்கள் செல்ல வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கி வருகிறது. பொதுவாக அமாவாசை, பவுர்ணமி தினங்களில் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். அதுவும் ஆடி, அதை அமாவாசை திருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதனால், தை அமாவாசை விழா முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையில் காவல்துறை, இந்து அறிநிலையத்துறை, வனத்துறை, சுகாதாரம், மின்வாரியம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரி களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின், அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் (ஜனவரி 26ந்தேதி) 30ம் தேதி வரை சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.