‘டெட்’ தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது!

Must read

சென்னை,

ன்று தமிழ்நாடு முழுவதும்  ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு தேர்வு நடைபெறுகிறது.

இன்றைய தேர்வில், 1 முதல் 5 வகுப்பு வரையிலான இடைநிலை ஆசிரியருக்கான பட்டயப்படிப்பு தேர்வு  நடைபெறுகிறது.

இந்த தேர்வை 2 லட்சத்து 37 ஆயிரத்து 293 பேர் எழுதுகின்றனர். 598 மையங்களில் காலை 10 முதல் 1 மணி வரை இந்த தேர்வு நடைபெறும்.

நாளை நடைபெற இருக்கும் தேர்வில்,  6 வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான பட்டப்படிப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் தேர்வில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

தேர்வின் போது காப்பியடித்தல், ஆள்மாறாட்டம் முறைகேடுகளில் ஈடுபட்டால், 3 தேர்வுகளில் பங்கேற்க தடை என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

More articles

Latest article