சவூததி,
சவூதியில் உள்ள மெக்கா மீது தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதல் நடத்தி இனப்போராளிகளை ஒடுக்கி வருகிறது.
சவூதியில் உள்ள மெக்கா நகரம் இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படுகறிது. இன்று காலை ஹவுத்தி போராளிகள் மெக்கா நரகம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதல் மெக்காவிலிருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் நடந்ததாகவும், அதனை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்து நிறுத்தி தாக்கியதாகவும், சவுதி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.