ஸ்பெயினில் தீவிரவாதிகள் அட்டகாசம் : 13 பேர் பரிதாப மரணம்!

Must read

பார்சிலோனா, ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் உள்ள ஒரு முக்கிய வீதியில் பட்டப்பகலில் ஒரு வேன் வேகமாக ஓடி 13 பேர் மேல் ஏற்றிக் கொன்றுவிட்டு நிற்காமல் ஓடியுள்ளது.

லா ராம்ப்ளாஸ் என்பது பார்சிலோனாவின் பரபரப்பான வீதிகளில் ஒன்று,  இரவிலும் இங்கு ஆட்கள் நடமாட்டம் குறையாது.   இந்த வீதியில்  வேகமாக வந்த வேன் ஒன்று ஜனத்திரளிடையே புகுந்து பலர் மீதும் மோதியது.   இந்தக் சம்பவத்தில் 13 பேர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

இதைக் கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.   சாலைகள் ரத்தக் கறையுடன் காணப்பட்டது.  இந்த சம்பவத்துக்கு ஐ எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.   இறந்தவர்களில் பலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.  சுமார் 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மீண்டும் தாக்க வந்த தீவிரவாதிகளை போலீசார் சுட்டதில் 4 தீவிவாதிகள் மரணம் அடைந்ததாக ஒரு அதிகாரபூர்வமற்ற செய்தி ஒன்று தெரிவிக்கிறது

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article