சென்னையில் பயங்கரம்: கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர் தற்கொலை முயற்சி

Must read

சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர், கழுத்தறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் சுவேதா. இவர்  சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் பயிற்சி படித்து வருகிறார்.  இவரும்,  அதே கல்லூரியைச் சேர்ந்த திருக்குவளைப் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.  ஆனால், ராமச்சந்திரன், சுவேதாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இதுகுறித்து, சுவாதாவிடம், ராமச்சந்திரன் விவாதித்துள்ளார். ஆனால், அவரது காதலை ஏற்க  சுவேதா மறுத்து வந்துள்ளார். இதந்த நிலையில், கல்லூரிக்கு வந்த  சுவேதாவை வழிமறித்த  ராமச்சந்திரன், அவரிடம்  நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததாக் கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து, தான் மறைத்து‘ வைத்துருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்திவிட்டு ராமச்சந்திரனும் தானே கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனே காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலிஸார் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சுவேதா ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில்,  ராமச்சந்திரன் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்.

இதுகுறித்து சேலையூர் சேலையூர் சரக உதவி ஆணையாளர் முருகேசன் தலைமையில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More articles

Latest article