தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழகஅரசு

Must read

சென்னை: தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக பதவி வைக்கும் ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அயல் பணியில் இருந்து திரும்பிய டிஐஜி சரவணன் சுந்தர், திருச்சி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் ஐஜியானார் மகேந்திர குமார் ரத்தோட்.

காவல்துறை கணினிமயமாக்கல் பிரிவு எஸ்பியாக ஐபிஸ் அதிகாரி நிஷா, திருச்சி மாநகர ஆணையர் அருண் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை பொதுப்பிரிவு ஐஜி-ஆக ராதிகா, சேலம் நகரம், வடக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக மாடசாமி உள்ளிட்ட 10 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

More articles

Latest article