சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், அவ்வப்போது, பைக் ரேஸ், கார் ரேஸ், ஆட்டோ ரேஸ் போன்றவை நடைபெறுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. அதுபோல, நேற்று (ஞாயிறு)  நள்ளிரவு நடைபெற்ற கார் ரேஸின்போது, அதி வேகமாக அண்ணா நகரில்  வந்த கார் ஒன்று, சாலையோரத்தில் இருந்த மின்சார  டிரான்ஸ்பார்மரை இடித்து தள்ளிவிட்டு அருகே இருந்த  சூப்பர் மார்க்கெட்டின் ஷட்டரில் மோதி நின்றது.

பதபதகைக்கும் இந்த விபத்து குறித்தவீடியோ வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நள்ளிரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால், பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரில் பிரதான சாலையில் நேற்று நள்ளிரவு மின்னல் வேகத்தில் 2 சொகுசு கார்கள் கார் ரேஸில் சென்று கொண்டிருந்தனர் அப்போது அதில் ஒரு கார் எதிர்பாராதவிதமாக மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் சூப்பர் மார்க்கெட் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இந்த விபத்தில் சூப்பர் மார்க்கெட் நின்று கொண்டிருந்த நபர் பலத்த காயம் அடைந்தார். பொதுமக்கள்  அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.