பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்-கை 2010 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சானியா மிர்ஸா – சோயிப் மாலிக் ஜோடிக்கு இஷான் மிர்ஸா மாலிக் என்ற நான்கு வயது மகன் உள்ளார்.

சானியா மிர்ஸா – சோயிப் மாலிக்

திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் மகனை வளர்ப்பதில் இருவரும் அக்கறை காட்டி வருவதாகவும் பாகிஸ்தான் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து இவர்கள் சட்டப்படி விவாகரத்து பெறப்போவதாக தெரிகிறது.

மாலிக்கின் இந்த மனமாற்றத்துக்கு காரணம் 41 வயதான பாகிஸ்தான் மாடல் அழகியும் நடிகையுமான ஆயீஷா உமர் தான் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

மாலிக் – ஆயீஷா

மாலிக்கும் – ஆயீஷாவும் கடந்த ஆண்டு விளம்பரப்படம் ஒன்றில் நடித்தபோது ஏற்பட்ட நெருக்கம் காரணமாக தனது 35 வயது மனைவி சானியா மிர்ஸா-வுக்கு ‘பை’ சொல்லும் அளவுக்கு கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.

40 வயதாகும் மாலிக்குடன் சேர்ந்து ஆயீஷா நடித்த விளம்பரப் படத்தின் புகைப்படம் தற்போது சமூக வைரலாகி வருவதுடன் மிர்ஸா – மாலிக் விவாகரத்து உறுதி என்றும் சொல்லப்படுகிறது.