சென்னை

மெரினா கடற்கரையில் ரூ.35 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள கருணாநிதி நினைவிடம் குறித்த டெண்டர் அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதியின் நினைவிடம் சென்னையில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது.   இந்த வளாகத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட உள்ளதாக தமிழம முதல்வர் மு க ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதற்கான அறிவிப்பைச் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் வெளியிட்டார்.   அப்போது அவர் கருணாநிதி ஆற்றிய அரும் பணிகளை போற்றும் விதமாக அவரது சாதனைகள் மற்றும் சிந்தனைகளை  வருங்கால தலைமுறையினர் அறியும் வகையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்பில் ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கான டெண்டர்களை கோரி டிசம்பர் 28 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.