சென்னை:

மிழகத்தின் ஊரகப்பகுதிகளில்  318 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று சட்டமன்றத்தில் விதிஎன் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று  சமூக நலம், சத்துணவு திட்டத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறற்றது. அதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,

தமிழ்நாட்டில் உள்ள ஊரகச் சாலைகளை மேம்படுத்திட, நடப்பாண்டிலும், ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம், 5 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.

“கஜா” புயலினால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் பால மறுசீரமைப்புப் பணிகள் 200 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தார்ச் சாலைகளை மேம்படுத்த, நடப்பு ஆண்டில் 255 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஊரகப் பகுதிகளில், குடியிருப்புகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளி யேறும் கழிவு நீர் தேங்காமல் தடுத்திட, 2 லட்சத்து 500 சமுதாய உறிஞ்சுக் குழிகள், 183 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் நடப்பாண்டில் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே, நடப்பாண்டில் 10,000 தடுப்பணைகள் 312 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

நடப்பாண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பின் மூலம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரக பொருளாதார புத்தாக்கத் திட்டம் என்ற புதிய திட்டம், 210 கோடியே 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், கடலூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 5 மாவட்டங் களில் தலா 4 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும்.

நடப்பு ஆண்டில் 125 கோடி ரூபாய் செலவில் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படும்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், பல்வேறு சார் நீதிமன்றங்களுக்கு 202 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒரு அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்படும்.

இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.