சென்னை

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் நேற்று மாலை நீதிமன்றத்த்துக்கு படுத்த படுக்கையாக வந்து சரண் அடைந்துள்ளார்.

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தனது உணவு விடுதி கிளையில் பணி புரியும் மேலாளர் மகள் ஜீவஜோதியை திருமணம் செய்ய விரும்பி உள்ளார். ஏற்கனவே இரு மனைவிகள் இருந்த ராஜகோபாலை திருமணம் செய்ய விரும்பாத ஜீவஜோதி தனது விருப்பத்துக்கு இணங்க பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஆயினும் ஜீவஜோதி மீது ஆசையை இழக்காத ராஜகோபால் சாந்தகுமாரை மிரட்டி விலகச் சொன்னதாக கூறப்படுகிறது. இதை ஒட்டி காவல்துறையில் புகார் அளிக்கப்ப்ட்ட சில நாட்களில் சாந்தகுமார் கடத்திச் செல்லப்பட்டு கொடைக்கானலில் பிணமாக கிடைத்தார். அவரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த தண்டனையை அதிகரிக்க கோரி அரசு தொடர்ந்த வழக்கில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கபட்டது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டு அவர் இந்த மாதம் 7 ஆம் தேதிக்குள் சரண் அடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் சரண் டையவில்லை.

மாறாக அவர் தரப்பில் அவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி சரண் அடைய அவகாசத்தை நீட்டிக்க கோரி மனு அளிக்கப்பட்டது.  நேற்று இந்த மனு ரத்து செய்யப்பட்டு அவர் உடனைடியாக சரண் அடைய உத்தரவிடப்பட்டது. அதை ஒட்டி நேற்று மாலை ராஜகோபால் படுத்த படுக்கையாக வந்து நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.