டில்லி

டில்லி நகரில் கடும் குளிராக உள்ளதால் சாலை வாசிகள் தங்கத் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது டில்லியில் கடுங்குளிர் நிலவி வருகிறது.  இந்தக் குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் தீ மூட்டி குளிர்காய்வது என பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.  அப்படியும் குளிர் குறைவதாக இல்லை.

குறிப்பாக சாலை வாசிகளின் நிலை பரிதாபத்துக்கு உரியதாகி இருக்கிறது. எனவே அவர்களுக்காகத் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  டில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து\ தற்போது 190 கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த கூடாரங்களில் சுமார் 8 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த கூடாரங்களின் எண்ணிக்கையைத் தேவைக்கேற்ப அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கு மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.