5 நாட்களில் குரூப் 2, 2 ஏ தற்காலிக விடைக்குறிப்பு இணையத்தில் வெளியீடு

Must read

சென்னை

ன்னும் 5 நாட்களில் குரூப் 2, 2 ஏ தற்காலிக விடைக்குறிப்பு இணையத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

நேற்று தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.  இத்தேர்வு  இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலி பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் உள்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் நடந்தது.

நேற்று மொத்தம் 9.94 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில் குரூப் 2, 2ஏ தேர்வில் தவறான கேள்விகள் இடம் பெற்றிருந்ததாகத் தகவல் வெளியானது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

”தமிழகத்தில் குரூப் 2, 2ஏ தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை,  குரூப் 2, 2ஏ தேர்வின் கேள்வி, மொழிபெயர்ப்பு, விடை தேர்வுகளில் எந்த தவறும் கிடையாது. இணையத்தில் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு 5 நாட்களுக்குள் வெளியிடப்படும். இந்த விடைக்குறிப்பு மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும்”

என்று அறிவித்துள்ளது.

More articles

Latest article