லாக்டவுனில்  நடக்கும் நடிகர் திருமணம்..

Must read

பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரான சுதாகர் ரெட்டியின் மகன் நிதின். இவர் தெலுங்கில் ஜெயம் படம் மூலம் அறிமுகமானார். தற்போது இளம் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இவர், ராங்டே’ என்ற படத்தில் தற்போது நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இயக்குனர் வெங்கி இப்படத்தை டைரக்டு செய்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் நவீனுக்கு ஷாலினி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த் தம் நடந்தது. இவர்களது திருமணம் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டி ருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திருமண தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது
முன்னதாக திருமணத்தை துபாயில் நடத்த திட்டமிட்டார் நவீன். கொரோனா லாக் டவுனால் அது நடக்கவில்லை. ஐதராபத்தி லேயே தடபுடலாக எண்ணினார். ஊரடங்கு கட்டுபாடால் அதுவும் நடக்க வில்லை. மீண்டும் திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம் என்பதால் வரும் ஜூலை 26ஆம் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெறும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

More articles

Latest article