92 ஆயிரம் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்கள்: மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்

Must read

புதுடெல்லி:

நாடு முழுவதும் 92 ஆயிரம் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்கள்.


ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதம் தேசிய அளவில் ஆரம்பப் பள்ளியில் 23:1 இருக்க வேண்டும், உயர் ஆரம்ப பள்ளியில் 17:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும், செகன்ட்ரி பள்ளிகளில் 27: 1 என்ற விகிதத்தில் ஆசிரியர் மாணவர் விகிதம் இருக்க வேண்டும்.

92,275 ஆரம்ப மற்றும் செகன்ட்ரி பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, கேள்வி ஒன்றுக்கு இவ்வாறு பதில் அளிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில்தான் ஓராசியர் மட்டும் பணியாற்றும் பள்ளிகள் அதிகளவில் உள்ளன. இதற்கு அடுத்த வரிசையில் உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், ஆந்திரா உட்பட 5 மாநிலங்கள் வருகின்றன.

டில்லியில் கூட 5 பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article