புதுடெல்லி:

36 ரஃபேல் விமானங்களின் கட்டமைப்பு விவரங்களை மாற்ற முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.


காங்கிரஸ் எம்.பி. கே.சி. ராமமூர்த்தி எழுத்துமூலம் எழுப்பி கேள்விக்கு பதில் அளித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தராமன், ” ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் முடிவு செய்த ஒப்பந்தங்களின் அடிப்படையில்தா  ஒப்பந்தம் செய்தோம்.

ஆயுதம் ஏந்திய விமானங்களின் விலையை வெளிப்படுத்த முடியாது. இந்த உடன்படிக்கைக்கு முன் பேச்சுவார்த்தைக் குழு 74 கூட்டங்களை நடத்தியது,” என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்.

விவரங்களை வெளிப்படையாக வெளியிடுவது “தேசிய பாதுகாப்பு நல்லதல்ல. விமானத்தின் அடிப்படை விலையை ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தெரிவித்துவிட்டோம் என்றார்.

காங்கிரஸ் எம்.பி. குமாரி செல்ஜா, சித்தராமன் எழுப்பிய மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், விமானங்களின் விலையை அதிகரிக்கவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவால் முழு தொகுப்பு விலை நிர்ணயிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.