பெங்களூரு:

‘Man vs Wild’ புகழ் பியர் கிரில், பந்திபுர் புலிகள் சரணாலயம் வந்தடைந்தார். இங்கு நடிகர் ரஜினியுடன் டாகுமெண்டரி படத்தில் நடிக்க உள்ளார்.

மும்பையைச் சேர்ந்த  நிறுவனம் தயாரிக்கும் டாகுமெண்டரி படத்தில்  டிஸ்கவரி சேனலில் பிரபல நெறியாளர் பியர் கிரில்ஸுடன் நடிகர் ரஜினி நடிக்க இருக்கிறார். இந்த படப்பிடிப்பு  கர்நாடக மாநிலத்தில் பந்திபுர் புலிகள் சரணாலயத்தில்  நடைபெற உள்ளது.

இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரஜினி, ஏற்கனவே தனது மகள் சவுந்தர்யாவுடன் பந்திபுர் சரணாலயம் சென்றுள்ள நிலையில்,  பியர் கிரில்ஸும் அங்கு வந்தடைந்துள்ளார்.

ஆன்மீக அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த ரஜினி, பியர் கிரில்ஸுடன் இணைந்து ஆவணப்படத்தில் நடிப்பது, அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.