மதுரை:

ஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கும், சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகமும் செய்யப்படும் என்று, தமிழகஅரசு, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தெரிவித்து உள்ளது.

இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் நோக்கில் இரு மொழிகளிலும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தெரிவித்து உள்ளது. (தமிழில் – குடமுழுக்கு, சமஸ்கிருதத்தில் – கும்பாபிஷேகம்)

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் பிப்ரவரி 5-ல் நடைபெற உள்ளது இந்த இரு தரப்பினர் இடையே .விவகாரத்தில் சர்ச்சைகள் உருவாகி உள்ள நிலையில், குடமுழுக்ககை சிறப்பாக நடத்தும் வகையில், தமிழக தலைமைச் செயலாளர், மாவட்ட கலெக்டர் கொண்ட 21பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் உள்பட சிலர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில், தஞ்சை பெரிய கோயில் தமிழர்களின் தனி அடையாளம். ஆகவே, தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை தமிழில், தமிழ் சைவ ஆகமங்களான தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை  நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது, ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில்  தமிழ் மொழிக்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் சமமான மதிப்பே வழங்கப்படுகிறது. குடமுழுக்கு விழாவை தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்