ஐதராபாத்:
ணம் இல்லாததால், இறந்த மனைவியின் உடலை தள்ளு வண்டியில் வைத்து 60 கி.மீ., தள்ளி சென்ற பரிதாப சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி, ராமுலு, 53, கவிதா, 45. இருவரும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். சிறிது காலம் ஐதராபாத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தனர். அங்கு, ஒரு அமெரிக்க நிறுவனம், பிச்சைக்காரர்களுக்கு, மாதந்தோறும், 5 கிலோ இலவச அரிசி அளித்து வருகிறது.
இதை அறிந்து, ரயில் மூலம், நேற்று காலை, ஐதராபாத் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தனர். எதிர்பாராத விதமாக கவிதா, ரயில்வே ஸ்டேஷனில் மரணமடைந்தார்.

சொந்த ஊருக்கு மனைவியின் உடலை கார் அல்லது ஆம்புலன்சில் எடுத்துச் செல்ல ஆம்புலன்சை நாடினார். ஆனால் பெரும்பாலான ஆம்புலன்சுகள் வர விரும்பாமல் தட்டி கழித்தினர். மேலும் ஒருசிலர் அடாவடியாக 5000 ரூபாய் பணம் கேட்டனர்.
ராமுலுவிடம் அந்தளவு பணம் இல்லை. அதனால் மறறொரு பிச்சைக்காரரிடம் இருந்து தள்ளுவண்டியை பெற்றார்.
அதில், மனைவியின் உடலை வைத்து வெள்ளிக்கிழமை ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு,  சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள  விக்கராபாத் பகுதிக்கு சனிக்கிழமை பிற்பகல்  வந்தடைந்தார்.
இதைகண்ட அப்பகுதி மக்கள்,  அவரது பரிதாப நிலையை கண்டு இரக்கப்பட்டு பண உதவி செய்து, போலீசாரின் உதவியுடன்  கவிதாவின் பிரேதத்தை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி ஸ்ரீராமுலுவின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
சொந்த ஊரிலும் கவிதாவின்   இறுதி சடங்கு செய்ய அவரது உறவினர்கள் யாரும் முன்வரவில்லை என்பது மேலும் பரிதாத்திற்குரியது.
இதுகுறித்த தகவல்கள் ஊடங்களில் வெளிவந்ததை தொடர்ந்து நமது நாட்டில் நிலவி வரும்  மனிதாபிமானமற்ற செயல்பாடுகளை அறிந்து சமூக ஆர்வலர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இதேபோல் ஏற்கனவே ஒடிசாவில் நடைபெற்ற சம்பவங்கள் இந்தியா முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.