ஹைதராபாத்:
செப்டம்பர் 1 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிரகதி பவனில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், அனைத்து கல்வி நிறுவனங்களையும் மீண்டும் திறப்பதற்கான அரசின் முடிவுக்குக் காரணமான காரணங்கள் குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் விரிவாக விளக்கினார்.

ஒரு வாரக் காலத்திற்குள் பள்ளிகள் மீண்டும் தொடங்கப்படுவதால், வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் வளாகங்களை சோடியம் குளோரைடு மற்றும் பிளீச்சிங் பொடி போன்ற ரசாயனங்கள் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல், வகுப்பறைகள் உட்படப் பள்ளி வளாகங்கள் முழுவதையும் சுத்தப்படுத்த வேண்டும். என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பள்ளியில் படிக்கும் போது, ​​முகக்கவசம் அணிவது மற்றும் கைகளைச் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகளை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவுறுத்தினார். குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் கொரோனா நெறிமுறையைத் தவறாமல் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.