Skip to content
  • Wed. Sep 23rd, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

அரசு ஊழியர்களின் ஊதியம், நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம்… புதிய சட்டம் அமல்

Jun 18, 2020

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஊதியம், நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுஉள்ளது.

இதன் காரணமாக,  அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில், குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கால் அனைத்து பணிகளும் முடங்கி உள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. மாநில அரசுகளும், கொரோனா தடுப்பு பணிக்கு ஏராளமாக செலவிடுவதால்,  நிதி செலவினங்களை கட்டுப்படுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியப்பயன்களில் கை வைக்க பல மாநில அரசுகள் முன்வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில், சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் நிதிநிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில், குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்படும் என ஏற்கனவே  அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘தெலுங்கானா பேரழிவு மற்றும் அவசர பொது சுகாதார நிலை, 2020’  என்ற பெயரில் சிறப்பு அவசர சட்டம் இயற்றப்பட்டுஉள்ளது.  இதற்கு மாநில கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி உள்ளார்.

அதைத்தொடர்ந்து,  இந்தச் சட்டம்  சட்டம் மார்ச், 24 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  மாநில அரசின் நிதி வருவாய் குறைந்துள்ளதால், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தரப்படும் ஊதியம் உள்ளிட்ட நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று அதன் ஷரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post navigation

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்வு… பலி 12,237 ஆக அதிகரிப்பு…
சென்னை உள்பட 4 மாவட்ட அம்மா உணவங்களில் இலவச உணவு… எடப்பாடி அறிவிப்பு

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer