இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்வு… பலி 12,237 ஆக அதிகரிப்பு…

Must read

டெல்லி:
ந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்ந்துள்ளது, பலி எண்ணிக்கையும் 12,237 ஆக அதிகரித்து உள்ளதாகவும்,  நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் ஒரே நாளில் புதிதாக  12,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  இன்று (18ந்தேதி) காலை 9 மணி அளவில் வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில்12,881 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன்காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில், 1லட்சத்து 60 ஆயிரத்து 384 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1லட்சத்து 94 ஆயிரத்து 328 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும்  334 பேர் கொரோனாவினால் பலியான நிலையில்,  இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது.
மாநில வாரியாக பாதிப்பு விவரம் மாநிலம்:
மஹாராஷ்டிரா  –  1,16,752 தமிழகம்- 50,193  டில்லி -47,102, குஜராத்-25,093, உ.பி.,-14,598, ராஜஸ்தான்-13,542, மேற்கு வங்கம்- 12,300 ம.பி.,-11,244, அரியானா-8,832, கர்நாடகா-7,734. ஆந்திரா 7,071, பீஹார்-6,942, தெலுங்கானா-5,675, காஷ்மீர்-5,406, அசாம்-4,605, ஒடிசா-4,338, பஞ்சாப் 3,197, கேரளா-2,697, உத்தர்காண்ட்-2,023, ஜார்க்கண்ட்-1,895, சத்தீஸ்கர்-1,864, திரிபுரா-1,135, லடாக்-687, கோவா-656, இமாச்சல பிரதேசம்-56908, மணிப்பூர்-552, சண்டிகர்-358-, புதுச்சேரி-245, நாகலாந்து-193, மிசோரம்-121.

More articles

Latest article