‘ஐதராபாத்: தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலக திறப்பு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகரில் உசைன் சாகர் ஏரிக்கு அருகே உள்ள கட்டிடத்தில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் சரித்திர புகழ் வாய்ந்தது ஆகும். இந்த கட்டிடத்தில் வாஸ்து சரியில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தலைமை செயலகத்துக்கு ரூ.400 கோடி செலவில் ஒரு கட்டிடமும் சட்டப்பேரவைக்காக ரூ.100 கோடி செலவில் மற்றொரு கட்டிடமும் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்முடு கட்டிட பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த புதிய தலைமை செயலகத்தை கட்டி முடித்துள்ளது. அதன் திறப்பு விழா வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்தார்.
இதனை தொடர்ந்து, பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற உள்ள விழாவுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.