கோதாவிரி:
தெலுங்கானா மாநிலத்தில் மேற்கு கோதாவரியில் உள்ள மேதக் மாவட்டத்தில் வெள்ளத்தில்  கார் அடித்து செல்லப்பட்டது. இதில் ஒரு குடும்பமே பலியானது. கணவன், மனைவி 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சோகம் நடைபெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டம் தட்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணிஅவரது மனைவி அஸ்மிதா . இவருக்கு 10 மாத குழந்தை  குழந்தை உள்பட  4 பெண் குழந்தைகள்  உள்ளனர்.
சம்பவத்தன்று அஸ்மிதா காபி குடித்து கொண்டிருக்கும் போது கை தவறி காபி அவர்மீது கொட்டியது.  இதனால் அவரது  உடல் வெந்தது. வலியால் அலறி துடித்தார்.
இதை பார்த்தும் அவரது கணவர் ராஜாமணி, மனைவி மற்றும் குழந்தைகளை காரில் அழைத்துகொண்டு பக்கத்து ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். உடன் தனது சகோதரர் நவீனையும் அழைத்து சென்றார். காரை டிரைவர் இஸ்மாயில் என்பவர் ஓட்டினார்.
car
மருத்துவமனைக்கு செல்லும் வழியில்  காரேசாம் என்ற இடத்தில் பில்லிவாரு என்ற ஆறு உள்ளது. தற்சமயம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனத்த மழை பெய்துள்ளதால்  ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அந்த ஆற்றை கடந்துதான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதால்,  ஆற்றை கடந்து செல்ல முடிவு செய்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
காரினுள் இருந்த  நவீனும், இஸ்மாயிலும்  ஆற்றில் உள்ள  ஒரு மரக்கிளையை பிடித்து கொண்டனர். ஆனால் காரினுள் இருந்த ராஜாமணி குடும்பத்தினர் காரோடு ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.
மரக்கிளையில் தொங்கிய நவீன் மற்றும் டிரைவர் இஸ்மாயில் ஆகிய இருவரையும்   கிராம மக்கள் கயிறு மூலம் மீட்டனர்.
இந்த நிலையில் ராஜாமணி 5 பெண் குழந்தைகளின் உடல்களுடன் கார் கரை ஒதுங்கியது. 6 பேர் உடல்களை போலீசார் மீட்டனர்.
இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.