தராபாத்

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.  அம்மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுள்ளார்.  கடந்த 2 முறையாகத் தெலுங்கானா முதல்வராக இருந்த சந்திரசேகர ராவ் பதவி இழந்துள்ளார்.

இன்று தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்திரசேகர ராவ் வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. எனவே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.