ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48 ஆயிரம் பேர்களை ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும், புதிய பணியாட்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் அம்மாநில அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்.

ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத சந்திரசேகர ராவ் அரசு, ஸ்ட்ரைக்கில் ஈடுபடும் அனைவரும் சனிக்கிழமை மாலைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டுமென கெடு விதித்தது.

ஆனால், ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய முதல்வர் சந்திரசேகர ராவ், வேலைநிறுத்தம் செய்த 48 ஆயிரம் பேரையும் மொத்தமாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள்.

இதனையடுத்து, நிலைமையை சமாளிக்கும் வகையில், அரசுப் பேருந்துகளை லீசுக்கு விடுதல் மற்றும் 4 ஆயிரம் புதிய தனியார் பேருந்துகளுக்கு அனுமதி அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

[youtube-feed feed=1]