விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘சங்கத்தமிழன்’ படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது.

பேனர், கட்-அவுட் போன்றவற்றை வைக்க கூடாது, என்று முடிவு செய்திருக்கும் விஜய் சேதுபதி ரசிகர்கள், அதற்கு மாறாக விவசாயிகளுக்கு விதை பந்து மற்றும் மரக்கன்றுகள் வழங்க முடிவு செய்திருந்தனர்.

 

 

கள்ளக்குறிச்சியை சேர்ந்த விவசாயி பிரகாஷ் தனது நிலத்தில் நெல் பயிர் செய்வதற்காக வட்டிக்கு கடன் கேட்டிருந்த தகவலை அறிந்த விஜய் சேதுபதி ரசிகர்கள் பிரகாஷை தொடர்பு கொண்டு நெல் பயிர் வைப்பதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டதோடு , விவசாயி பிரகாஷின் ஒரு ஏக்கர் நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது, நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகளை செய்து அவருக்கு ரூ.10 ஆயிரம் பணமும் வழங்கியுள்ளனர்