பாட்னா

பீகார் இளநிலை பொறியாளர் தேர்வு பட்டியலில் சன்னி லியோன்  பெயர் இடம்  பெற்றதற்கு ராஷ்டிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

பீகார் மாநில பொது சுகாதாரத்துறை சார்பாக நடத்தப்பட்ட இளநிலை பொறியாளர் தேர்வுப் பட்டியல் இணையத்தில் வெளியாகியது.    இந்த பட்டியலில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் முதல் இடம் பெற்றுள்ளதாக காணப்படுகிறது.    அந்தப் பெண்ணின் தந்தை பெயரும் சன்னி லியோன் தந்தையின் பெயர் ஆகும்.

இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பெற்றவரான நிர்மல் சக்கரவர்த்தி என்பவரின் தந்தை பெயரக மறைந்த பாலிவுட் நடிகர் ஓம்புரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.   அது மட்டுமின்றி மூன்றாம் இடம் பெற்றவரின் பெயர் ஆங்கிலத்தில் என உள்ளது.  அந்த விண்ணப்பதாரரின் தந்தையின் பெயர்   என உள்ளது.

இதற்கு நடிகை சன்னி லியோன் தனது டிவிட்டரில் ”ஹ ஹ என்னுடைய மற்றொருவர் முதலிடத்தை பிடித்ததுல் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என கிண்டலாக பதிந்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ்  நிதிஷ் குமார் அரசுக்கு கடும் கண்டனம் தெரித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டரில், “நிதிஷ் குமாரின் தேர்வில் முதல் இடம் பிடித்தால் பணியில் முதலிடம் என்னும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக் கொள்கைக்கு நன்றி.  அதன் மூலம் பீகார் இளைநிலை பொறியாளர் தேர்வில் சன்னி லியோன் 98.5% மதிப்பெண் பெற்று உள்ளார்.  மற்றொரு விண்ணப்பதாரரான  mggvghhnnnn என்பவரின் மகனான  bvcxzbnnb மூன்றாம்  இடத்தில் உள்ளார்” என பதிந்துள்ளார்.

இந்த விண்ணப்பதாரரின் உண்மை பெயரே சன்னி லியோனா அல்லது யாரேனும் குறும்பு செய்துள்ளரா என நிச்சயமாக அரசு அதிகாரிகளால் கூற இயலவில்லை.