சென்னை:
குப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த கூடாது என்று பள்ளி கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில்,

  • பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை உள்ளூர் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு, தலைமை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
  • வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த கூடாது
  • பள்ளிகள் – பொதுமக்கள் உறவு நன்றாக இருக்க வேண்டும்
  • பள்ளிகளில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும், முதலில் CEO-க்கு தெரியப்படுத்த வேண்டும்.
  • CEO அனுமதியின்றி எதையும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கக் கூடாது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.