சென்னை:
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நடுவர்கள் 90 பேர் வருகை தந்துள்ளனர்.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மாபெரும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஜூலை 28-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில்,
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முதன்மை நடுவர் லாரன்ட் ப்ரைட் உள்பட 90 நடுவர்கள் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் போட்டிகளை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியை நடத்தும் தமிழகம் நடத்துகிறது என்றும், இதற்காக தமிழகம் 92 கோடி ரூபாய் செலவிட உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது.