சென்னை:

ரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 நாட்கள் நடைபெற உள்ள நாடு தழுவிய  போராட்டத்தில் பங்கேற்றால் அவர்கள்  ‘சம்பளம் கட்’ செய்யப்படும் என தமிழக  பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்கள்  மத்திய அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த  போராட்டத்தில், தாங்களும் கலந்து கொள்ளப்போவதாக  தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள்  மற்றும் ஆசிரியர் போராட்டத்தில்  பங்கேற்றால் அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தொடக்க கல்வி அலுவலகர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,   அரசு நிர்வாகத்தை பாதிக்கும் வகையில் அனுமதி இல்லா மல் போராட்டம் நடத்துவது விதிமுறையை மீறும் செயல் என்றும்,  வேலை நிறுத்த நாட்களில் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும், அன்று பணிக்கு வராதவர்கள் பட்டியல் காலை 10.30 மணிக் குள் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும்,  வேலை நிறுத்த நாட்களில் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.