சென்னை:

மிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள சென்னை சிறப்பு நீதிமன்றம், அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ள  ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டாலே அவரது எம்எல்ஏ  பதவி மற்றும் அமைச்சர் பதவிகள் தானாகவே பறிக்கப்பட்டு விடும் நிலையில் சிறப்பு நீதி மன்ற தீர்ப்பு காரணமாக பாலகிருஷ்ணரெட்டி  பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய  நீதி மன்றம், தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும் மூத்த வழக்கறிஞர்கள், பாலகிருஷ்ண ரெட்டியை குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதி மன்ற உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 2 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால், அந்த மக்கள் பிரதிநிதியின் பதவி உடனே, பறிபோய்விடும். அதன்படி உடனடியாக பாலகிருஷ்ண ரெட்டி எம்எல்ஏ பதவி பறி போகிறது. எனவே இயல்பாக அவர் அமைச்சராகவும் தொடர முடியாது என்றுகூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற எதிர் பார்ப்பு  நிலவி வருகிறது.

அனால், நாளை உயர்நீதி மன்றத்தில், சிறப்பு நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக  மேல்முறையீடு செய்யப் போவதாக பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார். உயர்நீதி மன்றம் எந்தவித தீர்ப்பும் கூற மறுத்துவிட்டாலோ அல்லது சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தாலோ, , பாலகிருஷ்ணா ரெட்டியின் எம்எல்ஏ பதவி, அமைச்சர் பதவி  பறிபோய்விடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

ஒருவேளை உயர்நீதி மன்றம், சிறப்பு நீதி மன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தால், பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சராக தொடர வாய்ப்பு உள்ளது. என்ன நடக்கப்போகிறது என்பது உயர்நீதி மன்ற தீர்ப்பை பொறுத்தே அமைய உள்ளது.