புதுடெல்லி: 
பிரதமர் நரேந்திர மோடி புதிய வரி விதிப்பு திட்டமான “வெளிப்படையான வரிவிதிப்பை” அறிவித்து, ஒரு நாளைக்கு பிறகு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: பிப்ரவரி 14, 2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய அதே உரையை மீண்டும் வெளியிட்டுள்ளார், கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரியில் நிலுவைத் தொகை 129 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் மோடி அரசாங்கத்தின் வெளிப்படையான வரி விதிப்பின் அப்பட்டமான உண்மை என்னவென்றால் வருமான வரி நிலுவை தொகையை பல மடங்கு அதிகரிப்பது மக்களை வேதனைபடுத்துவது தான்.
2020- ஆம் ஆண்டின் பட்ஜெட்டை மேற்கோள் காட்டிய  ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ரூபாய் 9,40,000 கோடி மதிப்புள்ள நேரடி வரி தொகை என்பது பெரும் சோதனையாக உள்ளது. மார்ச் 2014 நிலவரப்படி நேரடி வரி நிலுவை தொகை ரூபாய் 4,10,000 கோடி மட்டுமே. இந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 129 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது பேரிடியாக உள்ளது.
மேலும் பொருட்கள் அல்லது சேவைகளின் மறைமுக வரி 1,69,000 த்திலிருந்து, 11,09,000 வரை உயர்ந்துள்ளது. இது வெளிப்படையான வாரியா அல்லது ஈடுசெய்யமுடியாத வரியா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிறுவனங்கள் அல்லது கார்ப்பரேஷன்கள் செலுத்தவேண்டிய வரி கிட்டத்தட்ட 4,00,000 கோடியை தொட்டுள்ளது.  இதன் பெயர் அடிப்படை வரி வசூல் என்று இல்லாமல் வரி பயங்கரவாதம் என்று தான் தெரிவிக்க வேண்டும், இதை யாராவது அடிப்படை வரி வசூல் என்று கூறுவார்களா?
இவ்வாறாக அரசாங்கத்தின் நோக்கத்தை கேள்விக்குட்படுத்திய ரந்தீப் சிங் சுர்ஜேவாலா,  80,00,000 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வெளிநாட்டிலிருந்து திரும்பக் கொண்டு வருவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எதையும் செய்யவில்லை, இதற்கிடையில் இவ்வாறான வரிவிதிப்பு மக்களை சோதனைக்குட்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.