டெபாசிட் செய்யும் பழைய நோட்டுகளுக்கும் வரி உண்டு! அருண்ஜேட்லி

Must read

டில்லி,
ங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பழைய நோட்டுக்களுக்கும் வரிபிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி.
குறிப்பிட்ட அளவுக்கு மேல்  வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும்  ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு வரி விலக்கு கிடைக்காது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
jaitley
“நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவை தொடர்ந்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்” என்று மத்திய அரசு அறிவித்தது.
அதேபோல், மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறிய ஜேட்லி, “பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறாக டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி விலக்கு கிடையாது.  அந்தப் பணத்துக்கான ஆதாரம் என்னவென்பதை பொறுத்து வரி விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

அதேவேளையில், விவசாயிகளின் சேமிப்புக்கோ, இல்லத்தரசிகள் சேமிப்புக்கோ எவ்வித பாதிப்பும் இருக்காது. ரூ.25,000, ரூ.30,000, ரூ.50,000 போன்ற மக்களின் சிறு சேமிப்புகளை எளிதில் வங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
அதேவேளையில், கணக்கில்வராத பெருந்தொகையாக இருந்தால் அதற்கான கணக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கான கணக்குகள் சரியாக இருந்தால் நீங்கள் எவ்வித கவலையும் கொள்ளத் தேவையில்லை.
அரசின் இந்த நடவடிக்கையால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும். ஆனால், கருப்புப் பணத்துடன் வாழ்வதைக் காட்டிலும் இந்த சிரமத்தை சில காலம் பொறுத்துக் கொள்வது நல்லதே.
இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article