சென்னை,

பிரபல கோல்டுவின்னர் எண்ணை தயாரிப்பு நிறுவனத்தில் 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வருமான வரி சோதனை முடிவடைந்தது.

இதையடுத்து வரிஎய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கான வரி பணத்தை செலுத்த காளீஸ்வரி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல கோல்டு வின்னர் சமையல் எண்ணை, தீபம் விளக்கு ஏற்றும் எண்ணெய் உள்ளிட்ட எண்ணை வகைகளை தயாரித்து வருகிறது காளீஸ்வரி ரீ-பைனரி நிறுவனம்.

இந்நிறுவனத்தில் கடந்த 17ந்தேதி  முதல் 4 நாட்கள்  200 பேர் கொண்ட குழுவினர் நாடு முழுவதும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான 54 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின்போது காளீஸ்வரி நிறுவனம் வரி எய்ப்பு நடந்துள்ளதாகவும்,   90 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்து வரிஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை  அறிவித்துள்ளது.

ஆனால், காளீஸ்வரி நிறுவனம்,  வரி செலுத்த  ஒப்புக்கொண்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

தற்போதைய விதிகளின் படி 90 கோடி வரி எய்ப்பு தொடர்பாக 107% வரியை காளீஸ்வரி நிறுவனம் செலுத்த வேண்டும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.