சென்னை:

மிழகத்தில் பிளஸ்2 தேர்வில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஏற்கனவே வெளியிடும் முறையில் இருந்து கிரேடு முறையில் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. அடுத்த ஆண்டுமுதல் பிளஸ்-1க்கும் பொதுத்தேர்வு என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவம் பயில அகில இந்திய நுழைவு தேர்வு எழுத வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பதற்கும் நாடு முழுவதும் ஒரே வகையான தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பாடத்திட்டங்கள் மற்றும் மதிப்பெண் விகிதங்களில் மாற்றம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் ஒருசில நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பாடவாரியான மொத்த மதிப்பெண் 200 லிருந்து 100 ஆக குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தேர்வு நேரத்தையும் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கவும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

வகுப்புகளுக்கு ஏற்றவாறு 3 வகயைன சீருடைகள் மாற்ற திட்டம்.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.