தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய டாடா சஃபாரி கார் விற்பனைக்கு வந்துள்ளது இதற்கு 2.7 லட்ச ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வரும் அதிமுக-வின் பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா தனது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட இவரது சொத்துக்கள் பலவும் ஏலத்துக்கு வந்துள்ளது.

அந்த வகையில் இவர் பயன்படுத்திய டாடா சஃபாரி தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இந்தக் காரில் அமைச்சர்கள் பலரும் தொங்கிக்கொண்டு சென்றதும் அதன் டயர் முன் மண்டியிட்டு நின்று வணங்கிய நிலையில் அதனை நினைவுச் சின்னமாக வைப்பதற்கு யாரும் முன்வராத நிலையில் தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.